புற்றுநோயில் இருந்து பூரண குணமடைந்த மனிஷா கொய்ராலா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் | Manisha Koirala, who has fully recovered from cancer, fans happy with the picture released by Manisha Koirala
நடிகை மனிஷா கொய்ராலா, 1994ம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர்.பாலிவுட் டாப் நாயகியாக வலம் வந்த இவர் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நடித்தார்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே 2010ம் ஆண்டு பேஸ்புக் நண்பரான நேபாள தொழிலதிபர் சம்ரத் தஹாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார், ஆனால் இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற மனிஷா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு கடந்த 2012ம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ராலா அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் புற்றுநோய் மையத்தில் 1 வருட சிகிச்சை எடுத்துள்ளார்.

எனினும் இப்போது அந்த நோயில் இருந்து முழுவதுமாக குணமாகியுள்ள மனிஷா மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது மனிஷா கொய்ராலா இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாக அதைப்பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
