திரைப்படங்கள்

மாவீரன் சாட்டிலைட் ரைட்ஸ்ஸை கைப்பற்றிய பிரபல டிவி சேனல் | Maveeran satellite rights have been captured by a popular TV channel

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வரும் மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியானது.

Maveeran satellite rights have been captured by a popular TV channel

இந்நிலையில், இந்தப் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் குறித்து படக்குழு அபிஸியலாக அப்டேட் கொடுத்துள்ளது.

Maveeran satellite rights have been captured by a popular TV channel

சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியான மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள், இந்தப் படத்தின் ஹைப்பை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது. பரத் ஷங்கர் இசையில் அனிருத் பாடிய இந்தப் பாடல் ரசிகர்களின் வைபை தெறிக்கவிட்டது.

மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை வென்ற மடோன் அஸ்வின், மாவீரனில் என்ன மேஜிக் செய்திருப்பார் என எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி வாங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மாவீரன் படத்தை தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் இதனை தனது டிவிட்டரில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. மாவீரன் சாட்டிலைட் ரைட்ஸ்காக பல முன்னணி சேனல்கள் போட்டிப் போட்டு வந்த நிலையில், சன் டிவி பல கோடிகளை கொடுத்து தட்டித் தூக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸும், தியேட்டர் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் நிறுவனமும் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar Posts