சிம்புவை கரைசேர்க்க தாயும் மகளும் கடும் உழைப்பு..!
39 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில், டி.ராஜேந்தர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்கும் பணியில் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டி.ராஜேந்தர் ஓய்வில் இருப்பதால் அவரது மனைவி உஷாதான் பெண் பார்க்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை இதற்காக மயிலாடுதுறை செல்கிறாராம். கூடவே சிம்புவின் தங்கை இலக்கியாவும் சென்று அண்ணனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடுவதாகச் சொல்கிறார்கள்.