பூஜையுடன் தொடங்கிய புதிய படத்தில் முகேன் ராவ்..!(Mugen Rao in the new movie that started with Pooja)
‘வேலன்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் பிக்பாஸ் புகழ் முகேன் ராவ். இந்த நிலையில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது.

டி.ஆர்.பாலா தயாரித்து இயக்கும் இந்த படத்திற்கு ‘ஜின்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் முகேன் ராவ் மற்றும் பவ்யா திரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் பால சரவணன், இமான் அண்ணாச்சி, விஜய் ஜார்ஜ், வடிவுக்கரசி, வினோதினி, நந்து ஆனந்த், ரித்விக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
