இசைஞானி இளையராஜாவை சந்தித்த, “மியூசிக் ஸ்கூல்” படத்தின் கதாநாயகி ஸ்ரேயா சரண் | “Music School” movie heroine Shriya Saran meets musician Ilayaraja.
இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர்.

யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023 அன்று வெளியாகிறது.

இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தையும், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கல்விச் சாதனைகள் மட்டுமே முக்கியமில்லை, கல்வியல்லாத மற்ற செயல்பாடுகளும் என்பதை வலியுறுத்தும் இத்திரைப்படம், பொழுதுபோக்கு முறையில் இசைஞானியின் இசைக்கோர்ப்பில், 11 பாடல்களால் அழகாக விவரிக்கிறது.

அவற்றில் மூன்று பாடல்கள் இந்திய ரசிகர்களைக் கவரும் வகையில், கிளாசிகல் மியூசிக் முறையில் உருவாகியுள்ளது.

படம் வெளியாவதையொட்டி, படக்குழு தீவிரமாக முன்வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று இயக்குநர் இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். அவருடன் உரையாடி, புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.