திரை விமர்சனம் | செய்திகள்

வடிவேலின் கம்பேக்கில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரை விமர்சனம்..!(Naai Sekar Returns Review in Vadivel’s Comeback)

Naai Sekar Returns Review

காமெடி நடிகர் வடிவேலு ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடித்த திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இயக்குனர் சுராஜின் தலை நகரம் திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் ஆகும். நகைச்சுவை மூலம் இத்திரைப்படம் அனைவரும் கவர வந்துள்ளதாம். கதைய பார்க்கலாமா..?

படக்குழு

Naai Sekar Returns Review

இயக்கம்:

சுராஜ்

தயாரிப்பு:

சுபாஸ்கரன் அல்லிராஜா

வெளியீடு:

லைகா புரொடக்ஷன்ஸ்

முக்கிய கதாபாத்திரங்கள்:

வடிவேலு, சிவாங்கி ,ராவ் ரமேஷ், ஆனந்தராஜ், மனோபாலா
ஆர்.ஜே.விக்னேஷ்காந்த்,ரெடின் கிங்ஸ்லி, முனிஷ்காந்த், ஷிவானி நாராயணன்

இசை:

சந்தோஷ் நாராயணன்

படத்தின் கதை

வடிவேலு கதாநாயகன் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை திரில்லரில் துப்பறியும் நபராக நடித்துள்ளார்.

ஜாக்கி என்ற அதிர்ஷ்டமான நாய் யார் வீட்டில் இருக்கிறதோ அந்த குடும்பம் மிகவும் செழிப்பாக இருக்குமாம். வடிவேலு சிறுவயதில் இருக்கும்போது அந்த நாய் அவர் வீட்டில் இருப்பதால் அவர்களின் குடும்பம் செழிப்பாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த நாயை அந்த வீட்டு வேலைக்காரன் திருடி சென்று விடுகிறார். திருடியவர் பெரிய பணக்காரனாகிறார்.

Naai Sekar Returns Review

அதை மறந்து நடிகர் வடிவேலு வளர்ந்து வேலை வெட்டி இல்லாமல் வெட்டியாக‌ சுற்றித்திரியும் கதாநாயகனாக இருக்கிறார். ஏதாவது பெரிய பிஸினஸ் செய்து பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக பல வேலைகளை செய்து தோல்வியடைகிறார். இப்படியிருக்கையில் ஒரு ஜோசனையில் நாய்களை திருடி பணம் வேண்டலாம் என தோன்ற, அவ்ருக்கென ஒரு குழுவை உருவாக்கி பெரிய பணக்கார வீடுகளில் உள்ள நாய்களை திருடுகிறார்.

திருடிய பின் அந்த நாய்களின் முதலாளிகளிடம் மிரட்டி பேரம் பேசி பணத்தை பெற்று பெரிய ஹாங் ஸ்டாராக வளர்ந்து வருகிறார். சொல்லப்போனால் இந்தியாவின் நம்பர் வன் நாய் கிட்னாப்பர். இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் பெரிய வில்லன் ராவுரமேஷின் நாயை திருட முயற்சி செய்கிறார். அவர் தான் வடிவேலுவின் வீட்டில் நாயை திருடியவர். அந்த நாயை திருடியும் விடுகிறார்.

Naai Sekar Returns Review

அதன் பின் வடிவேலுக்கு அந்த நாயின் கதை தெரிய வருகிறது. அதனால் அவர் அந்த நாயை அவர் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார். இந்நிலையில் இதனை கண்டுபிடிக்க ஆனந்த ராஜின் குழு நியமிக்கப்படுகிறது. அவர்கள் வடிவேலுவின் குழுவை துரத்துகிறார்கள். கடைசியில் வில்லனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன.? பணக்ககாரன் ஆகினாரா? நாய் யாரிடம் கடைசியில் இருந்தது என்பதே கதையாகும்.

திறமையின் தேடல்

நடிகர் வடிவேல் நீண்ட நாளுக்கு பிறகு கதாநாயகனாக காமெடியிலும் சரி நடிப்பிலும் சரி பிண்ணியுள்ளார்.

நடிகர் ஆனந்த ராஜா காமெடிவில்லனாக அற்புதமான பெர்போமன்ஸை தந்துள்ளார்.

சிவாங்கி மற்றும் ஷிவானி நடிப்பு வழமையாகவுள்ளது. ரெடின் கிங்ஸ்லி,மனோபாலா போன்றோர் அவரது காமெடியை சிறப்பாக செய்துள்ளனர்.

Naai Sekar Returns Review

வில்லனாக ராவு ரமேஷ் அவரது கதாபாத்திரத்தை செய்துள்ளார். இசையில் சந்தோஷ் நாராயணன் அருமையாக செய்துள்ளார். 4 பாடலை வடிவேலை வைத்து பாடியுள்ளார். எடிட்டிங்,ஒளிப்பதிவு ஓகே.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸின் இயக்குனரான சுராஜ், ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை எழுத எந்த முயற்சியும் எடுக்கவில்லை, ஆனால் காமெடி மூலம் படம் பண்ண முயற்சி செய்துள்ளார். மற்றபடி படத்தின் டெக்னிக்கல் அம்சங்கள் மிகவும் சாதாரணமானவை,

படத்தின் சிறப்பு

வடிவேல் நடிப்பு,

இசை,

காமெடிகள்

படத்தின் சொதப்பல்கள்

படத்தின் நீளம்

சில காட்சிகள் மொக்கை மற்றும் டப்பிங்

காமெடிகள் சிரிப்பை பெரிதாக வரவைக்கவில்லை

Naai Sekar Returns Review

மதிப்பீடு: 2.5/5

நடிகர் வடிவேலுவின் கம்பேக்காக இருந்தாலும் சில இடங்களில் சொதப்பப்பட்டுள்ளது. வடிவேலுவை எப்பொழுது பெரிய திரையில் பார்த்தாலும் மகிழ்ச்சி தான். அவர் தன் கதாபாத்திரமாகவே மாறி நடித்து அசத்தியிருக்கிறார். குடும்பத்துடன் மற்றும் சிறுவர்களுடன் ஜொலியாக பார்க்கலாம்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts