இரத்த களரியுடன் நான் மிருகமாய் மாற திரைவிமர்சனம்..!(Naan mirugamai maara review)

கழுகு புகழ் சத்ய சிவா இயக்கிய ‘நான் மிருகமாய் மாறா’ திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். ஒரு இரத்தக்களரியான படம் . எல்லாமே ஆக்ஷசன் திரில்லராவே இருக்கிறது. வாங்க இந்த படத்தை ஒரு தடவை சுற்றி பார்க்கலாம்..
படக்குழு

இயக்கம்:
சத்ய சிவா
தயாரிப்பு:
டி.டி.ராஜா & டி.ஆர்.சஞ்சய் குமார்
வெளியீடு:
செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல்
முக்கிய கதாபாத்திரங்கள்:
சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த் , மதுசூதன ராவ், அப்பானி சரத், சூப்பர் குட் கண்ணன், கேஎஸ்ஜி வெங்கடேஷ் , துளசி
இசை:
முகமது ஜிப்ரான்
படத்தின் கதை
நடிகர் சசிகுமார் (பூமிநாதன் )ஒரு சவுண்ட் இன்ஜினியர் பாத்திரத்தில் நடித்துள்ளார், அன்பான மனைவி, மிகவும் நேசித்த மகள், பெற்றோர் மற்றும் தங்கையை உள்ளடக்கிய சிறந்த குடும்ப வாழ்க்கையாக சென்றுகொண்டிருக்கிறது. இப்படி செல்லும்போது அவரது தம்பியின் மரணத்துடன் குடும்பம் சரிந்தது.

அதாவது கதையின் ஆரம்பத்தில் ஒரு பெரிய தொழிலதிபர் (மதுசூதன் ராவ்) ஒருவரை மர்மமான கூலிப்படை கும்பல் குத்திக் கொல்ல முயற்சி செய்யும்போது சசிகுமாரின் தம்பி காப்பாற்ற முயற்சித்து வைத்தியசாலையில் சேர்க்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பலின் தலைவன் தம்பியை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
அதே மாதிரி தம்பியும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இதனால் அழுத்தமடைந்த சசிக்குமார் தம்பியைக் கொன்ற 6 பேரை கொலை செய்கிறார். அதனால் மீண்டும் வில்லன் அவரை தாக்க இதனிடையில் குடும்பம் சிக்குகிறது.
இதனால் சசிகுமாரின் முயற்சிகளில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. கடுமையாக அச்சுறுத்தப்படுகிறார், வில்லனிடமிருந்து தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்று பூமிக்கு தெரியவில்லை. அவர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதில் வெற்றி பெற்றாரா? அல்லது தன்னை இழந்தாரா? வில்லன் கொல்லப்பட்டாரா? என்பதே கதையாம்.
திறமையின் தேடல்
நடிகர் சசிகுமார் அவரது முழு முயற்சியையும் கொடுத்துள்ளார்.சசிகுமாரின் நடிப்பு பார்ப்பதற்கு பிரமிக்க வைக்கிறது. ஆனால் இன்னும், அவரது சில எதிர்வினைகள் தெளிவற்றதாகத் தெரிகிறது.
விக்ராந்த் நடிப்பதற்கு வில்லனாக இருந்தாலும் பெரிதாக நடிப்பு தென்படவில்லை, அவருக்கு வில்லனாக வாய்ப்புகள் குறைவு. அவரது வில்லத்தனமான நடிப்பு பார்வையாளர்களுக்கு கொஞ்சம் புதிது.

சசிகுமாரின் மனைவியாக ஹரிப்ரியா கண்ணியமான வேலைகளை வழங்குகிறார். ஜிம்கி கமல் புகழ் அப்பானி சரத் பரவாயில்லை. மதுசூதனனின் கதாபாத்திரம் க்ளைமாக்ஸில் ஏதாவது செய்யக்கூடும் என்ற சில எதிர்பார்ப்புகளை முறியடிக்கிறது,
ஜிப்ரானின் BGM படத்தின் மதிப்பைக் கூட்டுகிறது. ஆக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது, இருப்பினும் சில வான்வழி காட்சிகள் தேவையில்லாமல் தோன்றின. எடிட்டிங் ஏற்கத்தக்கது. முறையீட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அதிரடி நடனம். ஆக்ஷன் கோரியோகிராஃபி என்பது ஈர்ப்பின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.
மொத்தத்தில், சத்ய சிவா ஒரு அழுத்தமான கதைக்களத்தை எழுதியுள்ளார். ட்ராக்கை மிஸ் பண்ணாமல் இருக்க, லாஜிக்கையும் மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் சிறப்பு
சத்ய சிவாவின் வசனம்,
ஜிப்ரானின் BGM,
நட்சத்திரங்களின் நடிப்பு,
ஆக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு
படத்தின் சொதப்பல்கள்
கதையில் புதிதாக எதுவும் இல்லை,
நிறைய ரத்தக்கறைகள், அதிக வைலன்ஸ்
தீர்ப்பு

மதிப்பீடு: 2.25/5
நீங்கள் சசிகுமார் ரசிகராக இருந்து, க்ரைம் த்ரில்லர்களைப் பார்க்க விரும்புபவர்களாக இருந்தால், இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.