செய்திகள்

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது | Naatu Naatu song from the film ‘RRR’ won the Oscar award

கடந்தாண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்றிருந்த நாட்டு நாட்டு பாடல், தற்போது ஆஸ்கரையும் தட்டிச் சென்றது. 95வது ஆஸ்கர் விழாவில் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் விருது வென்று சாதனை படைத்துள்ளது.

Naatu Naatu song from the film ‘RRR’ won the Oscar award

விருது அறிவிக்கப்பட்டதும் மேடையேறிய இசையமைப்பாளர் MM கீரவாணி, ராஜமெளலி, தயாரிப்பாளர் கார்த்திகேயா உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்தார். கீரவாணியுடன் பாடலாசிரியர் சந்திரபோஸும் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பேசிய கீரவாணி, தனது மகிழ்ச்சியை பாடலாக பாடி ஆர்ஆர்ஆர் படத்தில் வேலை செய்த ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஆஸ்கர் விருதை சமர்ப்பணம் செய்தார். மேலும், இது இந்தியர்களுக்கு பெருமையான தருணம், அவர்களுக்கும் தனது விருதை அர்ப்பணித்தார்.

Similar Posts