தனுஷின் நானே வருவேன் திரைவிமர்சனம்..!(Nane Varvan movie review..!)

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தனுஷ். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் நானே வருவேன். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள் படம் எப்படி இருக்கு வாங்க பாக்கலாம்
படக்குழு
இயக்கம்:
செல்வ ராகவன்
தயாரிப்பு:
கலைப்புலி எஸ். தாணு
வெளியீடு:
கலைப்புலி எஸ். தாணு (வி கிரியேஷன்ஸ்)
முக்கிய கதாபாத்திரங்கள்:
தனுஷ்,இந்துஜா ரவிசந்திரன்,பிரபு எல்லி அவ்ரம்,செல்வ ராகவன்
இசை:
யுவன் சங்கர் ராஜா
படத்தின் கதை
படத்தில் தனுஷ் அவர்கள் ஒட்டி பிறந்த இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு, கதிர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். படத்தில் கதிர் வழக்கமான பிள்ளைகளைப் போல இல்லாமல் சிறு வயதில் இருந்து வித்தியாசமாக இருக்கிறார். இதன் காரணமாகவே அவருடைய பெற்றோர்கள் கதிரை ஒரு கோயிலில் விட்டு விடுகிறார்கள். பிரபுவை மட்டுமே அவர்களுடன் வைத்து வளர்க்கிறார்கள். பல வருடங்கள் கழித்து பிரபுவுக்கு அழகான மனைவி, அன்பான மகள் என்று சந்தோஷமாக வாழ்கிறார்.
அப்போது பிரபு தனுஷின் மகள் அடிக்கடி தனியாக பேசுகிறார். அவரிடம் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னுடைய மகள் மீது ஒரு ஆவி இருப்பதை தனுஷ் கண்டுபிடிக்கிறார். அந்த ஆவியிடம் தனுஷ் பேச முயற்சிக்கிறார். ஆனால், அந்த ஆவி தனுஷ் இடம் ஒரு கோரிக்கை வைக்கிறது. அதை செய்தால் தான் உன் மகளை விட்டுப் போவேன் என்று சொல்கிறது. தனுஷும் அதை செய்ய துணிகிறார். அந்த ஆவி அப்படி என்ன செய்ய சொன்னது? தனுஷ் ஆவி சொன்னதை செய்தாரா? தன் மகளை மீட்டாரா? குழந்தையில் விடப்பட்ட கதிர் தனுஷ் என்ன ஆனார்? என்பதை படத்தின் மீதி கதை.

படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபு ரோலில் தனுஷ் சாந்தமான அப்பாவாகவும், தன் மகளுக்காக துடிக்கும் காட்சிகள் எல்லாம் அற்புதமாக நடித்து இருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர் கதாபாத்திரத்தில் தனுஷ் கொடூர வில்லனாக மிரட்டி இருக்கிறார். படம் முழுக்க முழுக்க தனுசை சுற்றியே நகர்கிறது. படத்தில் தனுஷின் மகளாக நடித்து இருப்பவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. மேலும், படத்தின் முதல் பாதி கான்ஜுரிங் படம் போல திரில்லிங்காக சென்று கொண்டிருக்கிறது.
பின் இடைவெளி காட்சி அற்புதமாக இருக்கிறது. ஆனால், கிளைமாக்ஸ் தான் கொஞ்சம் சொதப்பிவிட்டார் என்று சொல்லலாம். படத்தில் தனுஷ் உடைய நடிப்பு சூப்பர். ஆனால், கதை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். முதல் பாதியில் இருந்த பரபரப்பும், திரில்லிங்கும் இரண்டாம் பாதியில் இல்லை. இரண்டாம் பாதி வில்லன் தனுஷால் மட்டுமே கதை நகர்கிறது. படத்திற்கு பக்க பலமாக ஒளிப்பதிவும், பின்னணி இசையும் இருக்கிறது.

இடைவெளி காட்சியில் பேயை கண்டுபிடிக்கும் இடத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை பார்வையாளர்களை உறைய வைத்திருக்கிறது. மேலும், இந்த படத்தில் பெரிதாக வசனங்கள் எதுவும் காண்பிக்கவில்லை. தனுஷ் உடைய நடிப்பிற்கே படத்தை பார்க்கலாம். மொத்தத்தில் படம் சுமாரான படமாக இருக்கிறது.
படத்தின் சிறப்பு
தனுஷ் நடிப்பு அற்புதம்.
படத்தின் முதல் பாதி சூப்பர்.
இடைவெளி காட்சி சிறப்பு.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
இந்துஜா,எல்லி ஆவ்ரம், செல்வராகவன் என குறைவான நடிகர்கள் குறைவான காட்சிகளிலேயே வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.
படத்தின் சொதப்பல்கள்
இயக்குனர் கதையை கொண்டு சென்ற விதத்தில் கவனம் செலுத்திருக்கலாம்.
இரண்டாம் பாதியில் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் படம் அற்புதமாக இருந்திருக்கும்.
கதிர் ஏன் இவ்வளவு கெட்டவனாக இருக்கிறார் என்பதற்கு எந்தவொரு வலுவான பின் கதையையும் சொல்லவில்லை.
மதிப்பீடு: 3/5
திரில்லர் ஜானர் படம் விரும்பும் ரசிகர்களுக்கு “நானே வருவேன்” செம டிரீட் ஆகும். இந்த படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.