ஆஸ்கார் விருதிற்கு தேர்வான நானி சாய்பல்லவி படம்..!
நானி நடித்த ஷியாம் சிங்கா ராய் படத்தை ராகுல் சன்கிரித்யன் இயக்க, வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்தார். கடந்தாண்டு இறுதியில் வெளியான இப்படம் மறுபிறவியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இதில் நானி இரட்டை வேடத்தில் நடிக்க, சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்துள்ளனர். சிறந்த காலகட்டப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியாபட் நடித்த ஆர்.ஆர்.ஆர் படத்திற்கும் ஆஸ்கர் கிடைக்கும் என இயக்குனர் ஆனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

