சின்னத்திரை

இயக்குனரை அறைந்து கன்னத்தில் ரத்தம் வரவைத்த நவீன்..!

நடிகர் நவீன் இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே அனைவரும் எதிர்பார்த்திருந்த கண்மணி- நவீன் திருமணம் ஜூன் மாதம் நடந்து முடிந்தது.
தற்போது நவீன் கலர்ஸ் தமிழ் சீரியலான கண்ட நாள் முதலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

அதாவது இடைவேளைக்கு பிறகு நவீனை நடிக்க அழைக்க உதவி இயக்குனர் சென்றார். இருவரும் பிரச்சனையில் சிக்கியபோது உதவி இயக்குநரின் கன்னத்தில் அறைந்தார் நவீன். பின் குலசேகரனுக்கு கண்ணுக்கு கீழ் இரத்தம் வந்து இருக்கிறது.இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Similar Posts