செய்திகள்

அஜித்தின் பிறந்தநாளுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாழ்த்துக் கூறி டிவீட் செய்துள்ளனர். | Nayanthara and Vignesh Sivan tweeted to wish Ajith on his birthday.

அமராவதி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அஜித், இன்று கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். ரசிகர் மன்றங்களை கலைத்தும் இவருக்கு இன்னும் கொஞ்சம் கூட மாஸ் குறையவே இல்லை. இந்நிலையில், இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித், வழக்கம் போல அமைதியான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Nayanthara and Vignesh Sivan tweeted to wish Ajith on his birthday.

இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனித்தனியாக வாழ்த்துக் கூறி டிவீட் செய்துள்ளனர்.

Nayanthara and Vignesh Sivan tweeted to wish Ajith on his birthday.

இதுகுறித்து நயன்தாரா தனது டிவிட்டரில், பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார், இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமையும் என பதிவிட்டு விடாமுயற்சி படத்துக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், விக்கியும் தனது டிவிட்டரில் அஜித்துக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார். உங்கள் மகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சியும், எல்லையில்லா அன்பு என்றும் நிரந்தரம் என பதிவிட்டுள்ளார். மேலும் விடாமுயற்சி வெற்றிப் பெறும் என அஜித் உட்பட மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விக்கி, நயன் இருவரும் அஜித்தின் பிறந்தநாளுக்கும் விடாமுயற்சி படத்தின் வெற்றிக்கும் வாழ்த்தியதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar Posts