செய்திகள்

மகன்களின் முழு பெயர்களை நயன்தாரா அறிவித்துள்ளார் | Nayanthara announced the sons’ full names

கடந்த ஆண்டில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்துக் கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமான அளவில் இந்திய அளவில் திரைத்துறை பிரபலங்கள் சூழ இந்த திருமணம் நடைபெற்றது.

Nayanthara announced the sons’ full names

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர்.

முன்னதாக தங்கனின் குழந்தைகளின் பெயர்கள் உயிர் மற்றும் உலகம் என்று விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் பெயர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட நயன்தாரா, குழந்தைகளின் முழுப் பெயர்களை அறிவித்துள்ளார்.உயிர் ருத்ரோநீல் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என நயன்தாரா தெரிவித்துள்ளார். இதில் என் என்பது நயன்தாராவை குறிக்கும்வகையில் அமைந்துள்ளது.

Similar Posts