திரைப்படங்கள்

புதுக்கூட்டணி சேர்ந்து உருவாக்கிய திரைப்படம் நெடுநீர் ..!(Neduneer, a movie made by newteam together)

வி.எஸ்.பாளையம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கும் படம் நெடுநீர். ராஜ்கிருஷ்ணன், இந்துஜா, மாகிரா சத்யா முருகன், மதுரை மோகன், எஸ்.கே.மின்னல் ராஜா, டி.கல்லேரி கே.கனகராஜ், கவுஷிக், மாணிக் சுப்ரமணியம் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

கடலின் அழகு, கடலின் ஆழம், கடலின் ஆர்ப்பரிப்பு, கடலின் மர்மம், கடலின் அமைதி, கடலின் பிரம்மாண்டம் இதுவே நெடுநீர். பதின் பருவ சிறுவனும், சிறுமியும் சூழலால் துரத்தப்பட்டு தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகின்றனர். எங்கு செல்வது எப்படி செல்வது என எந்த இலக்குமின்றி பயணிக்கின்றனர்.

இந்த சூழலில் நள்ளிரவில் நடுவழியில் இருவரும் பிரிய நேர்கிறது. 8 வருடங்கள் கழித்து கடலூரில் இருவரும் சந்திக்க நேர்கிறது. ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக உயிரைக் காப்பாற்றும் இடத்தில் அவள், உள்ளூர் தாதாவின் அடியாளாக உயிரைக் கொல்லும் இடத்தில் அவன். இனி என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை.

Neduneer

Similar Posts