நெப்போலியன்- விஜய் இருவருக்குமிடையில் விரிசல் விழ இதுதான் காரணம்..!
விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் போக்கிரி. இப்படத்தில் விஜய்யுடன் நடிகர் நெப்போலியனும் நடித்திருப்பார்.
போக்கிரி ஷூட்டிங்கின் போது நடிகர் நெப்போலியன் அவரின் நண்பர்களுடன் விஜய்யை சந்திக்க அவரின் Caravan-க்கு சென்றுள்ளார்.
அப்போது Caravan-ல் இருந்த விஜய்யை சந்திக்க அவரின் உதவியாளர் ஒருவர் அனுமதிக்க மறுத்துவிட்டாராம். கடுப்பான நெப்போலியன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
பின் விஜய் வெளியே வந்து அவரின் உதவியாளருக்கு அதரவாக பேசியது மட்டுமின்றி, நெப்போலியனிடம் கடுமையாக பேசிவிட்டாராம். இதனால் அவர்கள் இருவரும் தற்போதும் பேசி கொள்வதில்லை என சொல்லப்படுகிறது.