செய்திகள்

13 படங்களின் ஓடிடி உரிமையை 1000 கோடி கொடுத்து கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்..!(Netflix acquired the OTT rights of 13 films for 1000 crores)

பி வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் உரிமையை அதிக விலை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தையும் ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் உரிமையையும் நெட்பிளிக்ஸ் பெற்று இருக்கிறது.

அது மட்டுமன்றி ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் படத்தையும், விக்னேஷ் சிவம் இயக்கம் அஜித்தின் ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமையையும், ஜப்பான், மாமன்னன், ஆரியன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தையும் வாங்கியுள்ளது. இதில் எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இத்துடன் தனுஷின் வாத்தி படமும் அதைத்தொடர்ந்து வரலாறு முக்கியம், தலைகோதல் இறுகப்பற்று, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களையும் ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் உரிமையையும் நெட்பிளிக்ஸ் பெற்று இருக்கிறது. இவற்றையெல்லாம் சுமார் 1000 கோடி செலவு செய்து ott-யில் வெளியிடும் உரிமையை நெட்லிக் கைப்பற்றி இருக்கிறது.

இந்த 13 படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் நிச்சயம் லாபத்தை அல்ல போகிறது.

Netflix

Similar Posts