செய்திகள் | திரைப்படங்கள்

கேப்டன் மில்லர் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது | New information about the Captain Miller movie is out.

கேப்டன் மில்லர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

New information about the Captain Miller movie is out.

முக்கியமாக தனுஷின் லுக் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பீரியட் ஜானர் படம் என்பதால் வனப் பகுதிகளில் செட் போட்டு எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தனுஷ் ரசிகர்களுக்கு தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக உருவாகி வரும் கேப்டன் மில்லர், தீபாவளிக்கு ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

New information about the Captain Miller movie is out.

இதனிடையே சில வாரங்களுக்கு முன்னர் தனுஷின் லுக்குடன், கேப்டன் மில்லர் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியீடு குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. அதன்பின்னர் கேப்டன் மில்லர் டீசர் ஜூலையில் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

New information about the Captain Miller movie is out.

Similar Posts