செய்திகள் | திரைப்படங்கள்

கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. |New information about the release of Vikram’s Dhruva Nakshatram directed by Gautham Vasudev has been released.

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் கௌதம் வாசுதேவ். இவர் இயக்கிய காக்க காக்க, மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.

New information about the release of Vikram’s Dhruva Nakshatram

இவர் கடைசியாக சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கினார். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் கௌதம் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் ருத்ரதாண்டவம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் இப்போது சிம்புவின் பத்து தல, விஜய்யின் லியோ, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இருப்பினும் மீண்டும் கௌதம் இயக்கத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

இதற்கிடையே சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார் கௌதம் வாசுதேவ். இதில் விக்ரமுடன் சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, ராதிகா சரத்குமார், டிடி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

படமானது கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சில பிரச்னைகளால் துருவ நட்சத்திரத்தின் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. இருப்பினும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படி இருக்க சமீபத்தில் விக்ரமும், கௌதமும் சந்தித்து துருவ நட்சத்திரத்தின் அடுத்தக்கட்ட வேலைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.

இந்நிலையில் துருவ நட்சத்திரத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது வரும் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது மும்முரம் அடைந்துள்ளதாகவும், லியோ ஷூட்டிங்கை முடித்துவிட்டு கௌதம் சென்னை திரும்பியதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts