செய்திகள் | திரைப்படங்கள்

விஜய் சேதுபதியின் முதல் தமிழ் வெப் சீரிஸ் பற்றிய புதிய தகவல் | New information about Vijay Sethupathi’s first Tamil web series

தமிழில் மட்டும் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது டோலிவுட், பாலிவுட் என பான் இந்தியா ஸ்டராக கலக்கி வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர், ராஷி கண்ணா நடித்த ஃபார்ஸி வெப் சீரிஸ் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தியில் ராஜ் & டிகே இயக்கிய இந்த வெப் சீரிஸ், தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

New information about Vijay Sethupathi

வெப் சீரிஸ் மூலம் ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள விஜய் சேதுபதி, தற்போது தமிழ் வெப் சீரிஸிலும் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதியின் முதல் தமிழ் வெப் சீரிஸ்ஸான இதனை மணிகண்டன் இயக்குகிறார். காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் மணிகண்டன். விஜய் சேதுபதி – மணிகண்டன் காம்போ ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்களுக்குப் பிற்கு மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.

New information about Vijay Sethupathi

மணிகண்டன் இயக்கத்தில் இறுதியாக வெளியான கடைசி விவசாயி படத்தை விஜய் சேதுபதி தான் தயாரித்து இருந்தார். இந்நிலையில், தற்போது இவர்கள் இணையும் வெப் சீரிஸை டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளம் தயாரிக்கிறது. இதனையடுத்து இந்த வெப் சீரிஸ்ஸின் படப்பிடிப்பு மதுரை அடுத்த உசிலம்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது.

Similar Posts