சூர்யாவின் கங்குவா படத்தின் புதிய அப்டேட் | New update of Suriya’s Kanguva
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் உருவாகி வருகிறது. சூர்யாவின் முதல் 3டி திரைப்படமாக உருவாகும் கங்குவா மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கங்குவா படத்தின் படப்பிடிப்பு கோவா, இலங்கை பகுதிகளில் நடைபெற்றது. பேண்டசியான ஹிஸ்டாரிக்கல் ஜானர் படமாக உருவாகி வருவதால், கடற்கரை ஏரியாவிலும் ஹில்ஸ் பகுதிகளில் மட்டும் இந்தப் படத்தின் காட்சிகளை ஷூட் செய்து வருகிறாராம் சிறுத்தை சிவா. பழமையான கட்டடங்கள், மின் கம்பங்கள் இல்லாத பகுதிகள் என பார்த்து பார்த்து படமாக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட கேரக்டர்களில் சூர்யா நடித்து வருவதால், உடல் எடையை கூட்டியும் குறைத்தும் தனது கெட்டப்பை மாற்றி வருகிறார். இதற்காக பிட்னஸ், ஜிம் ஒர்க்அவுட் என அனைத்துவிதமாகவும் சூர்யா வேகம் கொடுத்து வருகிறாராம். இதனிடையே கங்குவா படப்பிடிப்பு கடந்த 22 நாட்களாக கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த ஷெட்யூல் முடிய லேட்டாகும் என படக்குழு நினைத்திருந்ததாம்.

ஆனால், சூர்யாவின் வேகமும் அர்ப்பணிப்பும் கொடைக்கானல் சென்ற வேகத்தில் படப்பிடிப்பை முடிக்க உதவியுள்ளது. இதனால், கொடைக்கானல் ஷெட்யூலை 22 நாட்களில் முடித்துவிட்டு சென்னை திரும்ப ரெடியாகிவிட்டதாம் கங்குவா படக்குழு. இதனை கங்குவா படத்தின் ஸ்டண்ட் கோரியோகிராபர் சுப்ரிம் சுந்தர் போட்டோவுடன் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவில் சூர்யா, சிறுத்தை சிவா, ஆர்ட் டைரக்டர் மிலன் பெர்னாண்டஸ் ஆகியோர் உள்ளனர்.