நயன்தாரா இரட்டை குழந்தைகள் பற்றி வெளியான தகவல்(News about actress Nayanthara’s twins)
திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பதிவிட்டார். அவர்கள் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றது அதன் பின் தான் தெரியவந்தது.
திருமணம் ஆகி 5 வருடங்கள் குழந்தை இல்லாதவர்கள் தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற முடியும் என சட்டம் இருக்கும்போது இவர்கள் எப்படி 4 மாதங்களில் பெற்றார்கள் என சர்ச்சை எழுந்தது. அது பற்றி விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சரும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அந்த இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாயாக இருந்தது யார் என்கிற விவரம் தற்போது கசிந்திருக்கிறது.
கேரளாவில் நயன்தாராவின் உறவினர் ஒருவர் தான் வாடகைத்தாயாக இருந்திருக்கிறார் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே இந்த விஷயம் பற்றி முடிவெடுத்து குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று இருக்கிறார் நயன்தாரா என செய்திகள் பரவி வருகிறது.