செய்திகள் | கலை காட்சி கூடம்

நிதி அகர்வால் சமீபத்திய புகைப்படங்கள் | Nidhhi Agerwal’s latest photos

2016ம் ஆண்டு நடந்த ஒரு திரைப்பட தகுதி சுற்றில் 300 மேல் போட்டியாளர்களுடன் கலந்து கொண்ட நிதி அகர்வால் அந்த சுற்றில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த போட்டியின் முடிவில் இவர் 2017ம் ஆண்டு ஹிந்தி திரையில் வெளியான ‘முன்ன மைக்கெல்’ படத்தில் நாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து ஹிந்தி திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

Nidhhi Agerwal’s latest photos

இப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அணைத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் பின்னர் 2018ம் ஆண்டு ‘சவ்யாச்சி’ என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து இவர் மிஸ்டர்.மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் ஒரு முக்கிய நடிகையாக சித்தரிக்கப்பட்டார்.

Nidhhi Agerwal’s latest photos

நிதி அகர்வால், தனது நேர்த்தியான நடிப்பு மற்றும் உடல் அமைப்பை கொண்டு சுலபமாக தெலுங்கு மற்றும் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்து இவர், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இந்திய திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.

இவர் தமிழ் திரைப்பட முன்னணி முக்கிய நடிகரான ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் ஜெயம் ரவியின் 25வது படம் என்பதால் தமிழ் மக்கள் இடையே மிக பிரபலமான திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடித்து அனைவராலும் கண்டறியப்பட்டு தமிழ் திரையுலகில் புகழ் பெற்றுள்ளார்.

இறுதியாக தமிழில் சிம்பு நடித்து வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நிதி அகர்வாலின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது அந்த வகையில் சில புகைப்படங்கள்

Similar Posts