செய்திகள் | கலை காட்சி கூடம்

நிவேதா தாமஸ் உடல் எடையை குறைத்து மீண்டும் அழகாக மாறியுள்ளார் | Nivetha Thomas has lost some weight and has become beautiful again

தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதாநாயகியாக உருவெடுத்தவர் தான் நிவேதா தாமஸ். இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

Nivetha Thomas

மேலும் சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழை விட தெலுங்கு படங்களில்தான் நிவேதா தாமஸ் அதிகமாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக தெலுங்கில் அவரது நடிப்பில் வெளியான ‘சாகினி தாகினி’ என்ற படம் சிறந்த பாராட்டைப் பெற்றிருக்கின்றது.

அதுமட்டுமல்லாது ரசிகர்களால் ‘கியூட்’டான நடிகையாக கொண்டாடப்படும் நிவேதா தாமஸ், தற்போது ஆளே மாறி போயிருக்கிறார். அதாவது முன்பு இருந்ததை விட 2 மடங்கு உடல் எடை கூடி இருப்பதாக பலரும் கூறி இருந்தனர்.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒளி மற்றும் இரவின் மூலமாகத் தான் வாழ்க்கை பிரகாசமாக இருக்கின்றது எனக் கூறி ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உடல் எடை தற்போது குறைந்து அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Similar Posts