தாய்மாமனை இழந்ததை உருக்கத்துடன் வெளியிட்ட நட்டி..!
சதுரங்க வேட்டை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நட்டி நட்ராஜ். மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நாயகனாக நடிக்கும் பகாசூரன் படத்திலும் நெகடிவ் ரோல் ஏற்று நடித்து இருக்கிறாராம் நட்டி.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் நட்டி நட்ராஜ், தனது தாய்மாமனின் இறப்பு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டுவிட்டில், “Tiles.. இது முதியோர்களின் எதிரி.. சமீபத்தில் எனது தாய் மாமனை இழந்து விட்டேன்..
காரணம் குளித்துவிட்டு வந்த உடன் கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிர் இழந்தார்.. நம்முடய கௌரவம் tiles ல் இல்லை. நம் முதியோர்களை காப்பதில் இருப்பது” என பதிவிட்டுள்ளார்.
