பலூன் ஊஞ்சலில் பறந்து கொண்டு வளைகாப்பு ‘பாண்டவர் இல்லம்’ நடிகை..!(Pandavar illam actress flying on a balloon swing Baby shower)
‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனு. நடிகை அனு கடந்த 2017 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அனு 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
சமீபத்தில் அனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டு தனது கணவர் விக்னேஷ் குறித்தும் பதிவிட்டுள்ளார். நானும் என் கணவரும் இந்த முறை ஒரு எளிமையான அழகான வளைகாப்பு நிகழ்வை விரும்பினோம்.
இந்த நிகழ்வு என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது, ஏனென்றால் கணவர் விக்கி எனக்கு நலங்கு சடங்குகளை செய்வது இதுவே முதல் முறை. ஊரில் உள்ள புது மணப்பெண்ணைப் போல் என் முகம் சிவந்தது! 😜😍
இந்நிலையில் தனது கணவர் விக்னேஷ் உடன் இணைந்து பலூன் ஊஞ்சலில் அந்தரத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கிரேன் உதவியுடன் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை டிகே போட்டோகிராபி அணியினர் எடுத்துள்ளனர்.


