திரை விமர்சனம்

பரோல் திரைப்பட விமர்சனம்..! (இரத்தம்,செண்டிமெண்ட்)(Parole movie review..! (Blood, Sentiment))

Parole movie review

பரோல் திரைப்படம் வெகு விமர்சையாக ஓடிக் கொண்டிருக்கிறது. எழுத்தில் பிரமாண்டமாகி உருவாகிய பரோல் திரைப்படத்தை உருவாக்கியவர் துவாரக் ராஜா. ரத்தமும் சதையும் கத்தியுமாக இருக்கும் கதைக்குள்ளும் தாய் மகன் , அண்ணா தம்பி பாச பிணைப்பைக் காட்டியுள்ளார். வாங்க கதைய பார்க்கலாம்..

படக்குழு

Parole movie review

இயக்கம்:

துவாரக் ராஜா

தயாரிப்பு:

எஸ்.மதுசூதனன்

வெளியீடு:

டிரிப்ர் எண்டர்டைமெண்ட்

முக்கிய கதாபாத்திரங்கள்:

லிங்கா, R. S. கார்த்திக், வினோதினி வைத்தியநாதன், மோனிஷா முரளி, ஜானகி சுரேஷ், கல்பிகா கணேஷ்

இசை:

ராஜ்குமார் அமல்

படத்தின் கதை

தாய் இறந்து போக அவரின் கிரியைகளை செய்ய சிறையிலிருக்கும் மகன் வந்தாரா இல்லையா என்பதே கதையாகும். வாங்க கதைக்குள் செல்லலாம்.

Parole movie review

சிறுவயதில் கணவரை இழந்த ஜானகி சுரேஸ்க்கு இரு மகன்கள். அதில் மூத்தவர் கரிகாலன் (லிங்கா), இளையவர் கோவலன் (ஆர் எஸ் கார்த்தி). தனது தாயை ஒரு நபர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க அவரின் மேல் கோவம் கொண்டு கொலை செய்துவிட்டு சிறைக்கு செல்கிறார் லிங்கா.

அங்கு பல பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார். அதனால் அங்கும் ஒருவரை கொலை செய்ய நேருகிறது. இதனால் தொழில் முறை கொலையாளியாக மறுகிறார். இப்படி இருக்கையில் இரட்டை கொலையால் ஆயுள் தண்டனை கிடைத்து மீண்டும் சிறைக்கு செல்கிறார்.

அவரது தாய் அவர் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். அடுத்து 2ஆவது மகன் ஆர் எஸ் கார்த்தி பிளம்பர் வேலையை செய்கிறார். இந்நிலையில் அவருக்கு தனது தாய் மீது எரிச்சலடைகிறார். ஏனென்றால் நல்ல வேலை செய்து நன்றாக இருக்கும் தன்னை விட தப்பு செய்து சிறைக்கு சென்ற அவன் மீது அதிக பாசம் காட்டுகிறாரே என்று, இதனால் தனது அண்ணன் மீதும் வெறுப்படைகிறார்.

இந்நிலையில் ஒரு நாள் தாய் இறந்து விட ஊரார் அனைவரும் மூத்த மகன் தான் கொல்லி வைக்க வேண்டும் என கூற, இல்லை நான் தான் வைப்பேன் என்று முரண்டு பிடிக்கிறார். இருந்தும் ஊரார் தடுக்க வேறு வழியில்லாமல் தனது அண்ணனை பரோலில் வெளியே எடுக்க முயற்சி செய்கிறார்.

தம்பி அண்ணனை பரோலில் எடுத்தாரா இல்லையா..? தாயிற்கு யார் இறுதி கிரியைகளை செய்தது என்பதே மீதி கதையாகும்.

திறமையின் தேடல்

சிறு சிறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள் லிங்கா மற்றும் கார்த்தி. கொடுத்திருக்கும் பாத்திரத்தை ஓவரா இல்லாமல் மெச்சுவரா செய்திருக்கிறார்கள். இவர்களின் கதைகள் மிகவும் அழுத்தமாக எழுதப்பட்டிருப்பதால் படத்திற்கு ஒரு பலமாக இருக்கிற‌து.

Parole movie review

மற்றும் தாயாக நடித்த ஜானகி சுரேஸும் தாய் பாத்திரத்தில் அவரதி திறமையை காட்டியுள்ளார். அடுத்து கதாநாயகிகளாக கல்பிகா மற்றும் மோனிசா முரளி நடித்திருந்தாலும் அவர்களுக்கு பெரிதாக கதை இல்லாததால் அவர்கள் பெரிதாக தென்படவில்லை. அட்வகேட்டா வந்து சென்றவர் நடிகை வினோதினி. அவரது நடிப்பு இப்படத்திற்கு இன்னொரு பக்க பலமாய் உள்ளது.

அண்ணன் தம்பி படம் எத்தனை பாத்திருத்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக நாம் எதிர்பார்க்காத அளவில் இந்த கதையை தந்து படம் பார்ப்பவர்களை அப்படியே மெய் சிலிர்க்க வைத்துள்ளார். அடுத்து ராஜ்குமார் அமல் இசை பரபரப்பு குறையாமல் பேக்ரவுண்ட் ஸ்கோர் சிறப்பாக செய்துள்ளார்.

கேமரா வேலை எடிட்டிங் எல்லாம் நன்று. தரமான படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் சிறப்பு

அழுத்தமான கதைகளம்

லீட் ரோல்களில் நடிப்பு

வித்தியாசமான திரைக்கதை

இசை மற்றும் எடிட்டிங்

படத்தின் சொதப்பல்கள்

கெட்ட வார்த்தைகள்

அதிக வைலன்ஸ் (கத்திகுத்து, இரத்தம், கொலை)

கோட்(court) சீன் நீளம்

மதிப்பீடு: 3.5/5

ரத்தம் தெறிக்க தெறிக்க விஜய் சேதுபதியின் விவரிப்பில் உருவாகிய நிறைய ட்விஸ்ட் நிறைந்த ஒரு திரைப்படம். ஒரு சிறுவனுக்கு ஒரு வாழ்க்கை கற்றுத்தரும் படமாகும். குறைகளை பார்க்காமல் இருந்தால் ஆத்மார்த்தமாக ஹப்பியாக நிச்சயம் பார்க்கலாம்.

Parole movie review

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts