செய்திகள் | திரை விமர்சனம்

பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின் திரை விமர்சனம் | Parundhaaguthu Oor Kuruvi movie review

Parundhaaguthu Oor Kuruvi movie review

கோ.தனபாலனின் இயக்கத்தில் நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’ படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

படக்குழு

இயக்கம்:

தனபாலன் கோவிந்தராஜ்

தயாரிப்பு:

லைட்ஸ் ஆன் மீடியா (ஈவ் சுரேஷ்/சுந்தரா கிருஷ்ணா.பி/வெங்கி சந்திரசேகர்)

வெளியீடு:

முக்கிய கதாபாத்திரங்கள்:

நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர் மற்றும் விவேக் பிரசன்னா 

இசை:

ரஞ்சித் உன்னி

படத்தின் கதை

சின்ன சின்ன திருட்டுகள், அடிதடிகளை செய்து விட்டு, ‘பெட்டி கேஸ்’ அக்யூஸ்டாக ஊருக்குள் வலம் வருபவர் தான் ஆதி (நிஷாந்த் ரூசோ). இவர் ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் சமயத்தில், மிளகுக்காட்டில் யாரையோ வெட்டிப் போட்டிருப்பதாக போலீஸிற்கு உடனடியாக தகவல் வருகிறது.

Parundhaaguthu Oor Kuruvi movie review

அந்த இடத்திற்கு வழிகாட்டச்சொல்லி, காவல் அதிகாரி போஸ் ஆதியை தாறுமாறாக இழுத்துக் கொண்டு செல்கிறார். அங்கே சென்றவுடன், ஆதியின் கையுடன் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டு பூட்டிவிட்டு போன் பேசிவிட்டு வரும்வரை, பிணத்தை பார்த்துக்கொள்ளுமாறு ஆதியிடம் கூறுகிறார் போலீஸ் அதிகாரி போஸ்.

Parundhaaguthu Oor Kuruvi movie review

இதனையடுத்து ஆதி, கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சிக்கையில், பிணமாக கிடந்த நபருக்கு இன்னும் உயிர் இருப்பதை அதன் மூலமாக தெரிந்து கொள்கிறார். அப்போது, அந்த நபரின் தொலைபேசிக்கு யாரோ ஒரு பெண் போன் செய்து, அவரை காப்பாற்றுமாறு ஆதியிடம் அழுது கெஞ்சுகிறார்.

அந்த பெண்ணுடன் பேசியதன் மூலம், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மாறன் என தெரிந்து கொள்கிறார், ஆதி. அதன் பின்னர் சிறிது நேரத்திற்குள் மீண்டும் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி கொலைகார கும்பல் வருகிறது.

அந்தக் கும்பலிடமிருந்து ஆதி மாறனை காப்பாற்றினாரா? மாறனை காப்பாற்றுமாறு கெஞ்சும் அந்த பெண் யார்? மாறனை அந்த கும்பல் கொல்ல முயற்சிப்பது ஏன்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் சிறப்பு

காடுகள் லொக்கேஷன் அழகாக இருக்கிறது.

அஷ்வின் நோயல் ஒளிப்பதிவு ஜஸ்ட் லைக் தட் காடுகளை படம் எடுத்து இருக்கிறது.

படத்தின் சொதப்பல்கள்

க்ளைமேக்ஸ் காட்சியில் ரசிகர்களுக்கு வரவேண்டிய தொய்வு, படத்தின் இரண்டு-மூன்று காட்சிகளிலேயே வந்து விடுகின்றது. 

சர்வைவல்-த்ரில்லர் வகை கதையாக இருந்தாலும், அந்த ஜானருக்கு ஏற்ற வேகம் படத்தில் இல்லை. 

மதிப்பீடு: 2.25/5

இந்த படம் ஒரு முறை பார்க்கக்கூடியது

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts