செய்திகள்

சீரியல் நடிகையை காதலிக்கும் பசங்க பட நடிகர்..!(Pasanga film actor in love with serial actress)

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் மெகா தொடரின் மூலம் நடிகையாக பிரபலமானவர் ப்ரீத்தி குமார். அதேபோல் சசிகுமாரின் தயாரித்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய திரைப்படம் பசங்க.

அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கிஷோர். இந்நிலையில் நடிகர் கிஷோர், சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ப்ரீத்தி குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “உன்னை திருமணம் செய்யும் நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகிறேன். அடுத்த வருடம் நாம் இருவரும் கணவன் மனைவியாக பிறந்த நாளை கொண்டாடுவோம். “லவ் யூ அச்சோமா” என்று கிஷோர் பதிவிட்டுள்ளார்.

Pasanga film actor
Pasanga film actor

Similar Posts