செய்திகள் | திரை விமர்சனம்

பத்து தல படத்தின் திரை விமர்சனம் | Pathu Thala movie review

Pathu Thala movie review

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள பத்து தல திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

படக்குழு

இயக்கம்:

ஒபிலி என் கிருஷ்ணா

தயாரிப்பு:

ஜெயந்திலால் கடாகே. இ.ஞானவேல்ராஜா

வெளியீடு:

ரெட் ஜெயண்ட் மூவிஸ்

முக்கிய கதாபாத்திரங்கள்:

சிலம்பரசன்,கவுதம் கார்த்திக்,கவுதம் வாசுதேவ் மேனன்,பிரியா பவானி சங்கர்,கலையரசன்,சாயிஷா சைகல்,அனு சித்தாரா,டீஜய் அருணாசலம்,ரெடின் கிங்ஸ்லி

இசை:

ஏ.ஆர்.ரஹ்மான்

படத்தின் கதை

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஏ.ஜி. ராவணன் {சிம்பு } ஆண்டு வரும் ஆட்சியை தகர்த்தெறிய பல முயற்சிகள் நடக்கிறது. துணை முதல்வராக இருக்கும் கவுதம் மேனனும் ஏ.ஜி. ராவணனை எப்படியாவது கொலை செய்து அவன் ஆட்டத்தை அடக்க வேண்டும் என முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அவர் முயற்சி எதுவும் கைகூடவில்லை.

Pathu Thala movie review

இந்த நிலையில் கவுதம் கார்த்திக் ரகசிய காவல் அதிகாரியாக ஏ.ஜி. ராவணனின் கோட்டை கன்னியாகுமாரிக்கு செல்கிறார். அங்கு ஏற்கனவே ஏ.ஜி. ராவணனின் மணல் கொள்ளையை தடுக்க பிரியா பாவனி ஷங்கர் போராடி கொண்டிருக்கும் நேரத்தில் கவுதம் கார்த்திக்கும் அங்கு வருகிறார்.

Pathu Thala movie review

ஏ.ஜி. ராவணனின் அடியாட்களில் ஒருவராக சேர்ந்ததுடன் நிறுத்தாமல், அவருடைய நம்பிக்கையையும் சம்பாதிக்கிறார் கவுதம் கார்த்திக். இதனால் ஏ.ஜி. ராவணன் கவுதம் கார்த்திக்கிற்கு மட்டும் தன்னுடைய மனதில் இடத்தை கொடுக்கிறார்.

இதன்பின் ஏ.ஜி. ராவணன் பக்கம் வரை சென்ற கவுதம் கார்த்திக் ஏ.ஜி. ராவணனுக்கு எதிரான ஆதாரங்களை எப்படி திரட்டினார். ஏ.ஜி. ராவணனை கொலை செய்ய முயற்சி செய்து வரும் கவுதம் மேனனின் வலையில் ஏ.ஜி. ராவணன் சிக்கினாரா? உண்மையிலேயே ஏ.ஜி. ராவணன் யார் என்பது தான் படத்தின் மீதி கதை..

படத்தின் சிறப்பு

சிம்புவின் அற்புதமான நடிப்பு

சிம்புவுக்குப் பிறகு கவுதம் கார்த்திக் அசத்தியுள்ளார். பத்து தல அவருக்கு திருப்புமுனை படமாக இருக்கும். தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு திரையரங்கில் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை செம மாஸ்.

சண்டைக்காட்சிகளும் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்

ப்ரியா பவானி ஷங்கர் ஒரு டான்ஸ், ஒரு காட்சி என்று சென்றுவிடாமல், நேர்மையான தாசில்தாராக வருவதன் மூலம் நடிப்பில் முன்னேறியுள்ளார்.

சிம்புவுக்காக எழுதப்பட்ட மாஸ் வசனங்கள்.

மஃப்ட்டி படத்தின் ரீமேக் என்றாலும், புதிய திரைக்கதையை வடிவமைத்த விதம்

படத்தின் சொதப்பல்கள்

முதல் பாதி திரைக்கதை சற்று மெதுவாக நகர்கிறது.

சிம்பு மற்றும் தங்கையாக வரும் அனு சித்தாராவிற்கு இடையே உள்ள அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட் இன்னும் கொஞ்சம் தூக்களாக இருந்து இருக்கலாம்.

மதிப்பீடு: 3.5/5

தியேட்டரில் பார்க்க கூடிய படம். இத்திரைப்படம் சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts