பட்டத்து அரசன் திரை விமர்சனம்(கபடியே வாழ்க்கை)(Pattathu Arasan review)

இயக்குனர் சற்குணத்தின் மீண்டும் ஒரு கிராமத்துக் கதையுடன் அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பட்டத்து அரசன். கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
படக்குழு

இயக்கம்:
சற்குணம்
தயாரிப்பு:
சுபாஷ்கரன்
வெளியீடு:
லைகா புரொடக்ஷன்ஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
அதர்வா, ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆஷிகா ரங்கநாத், ஜெயபிரகாஷ்
இசை:
ஜிப்ரான்
படத்தின் கதை
காளையர் கோவில் கிராமத்து மரியாதைக்குரிய பிரமுகரும் கபடி வீரருமான பொத்தாரியுடன் (ராஜ்கிரண்) படம் தொடங்குகிறது. அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு ஊருக்காக கபடி போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பைகளை குவித்தவர். அவரது மகன் பேரன் என அனைவரும் ஊருக்காக கபடி ஆடுகின்றனர்.

இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியும், அவருடைய மகனும் இறந்து விடுகிறார். அவருடைய மருமகள் தான் ராதிகா. மகன், மகள், பேரன், பேத்தி என கூட்டுக் குடும்பமாக வாழும் பொத்தாரி, சின்னதுரை(அதர்வா) மற்றும் அவரது அம்மா ராதிகாவை மட்டும் குடும்பத்திலிருந்து சின்னதுரை சம்பந்தப்பட்ட ஒரு வாக்குவாதத்தால் ஒதுக்கி வைக்கிறார்.
அதர்வா, குடும்பத்தை ஒன்று சேர்பதற்காக எவ்வளவு போராடினாலும், சின்னதுரையை ஏற்க, பொத்தாரியின் குடும்பம் மறுக்கின்றது. இந்நிலையில் பொத்தாரியைத் தொட்டு அவரது மூன்று தலைமுறையினரும் கபடிப் போட்டியில் கொடிக்கட்டி பறப்பது, அவரது முன்னாள் நண்பருக்கு (ஊர் பிரசிடன்ட்) பிடிக்காமல் போகிறது. பொத்தாரியின் பேரன், செல்லையாவிற்கு புரோ கபடி போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. இது, ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சடகோபனுக்கு பிடிக்காமல் போக,
தாத்தாவுடன் சேர்ந்து, சதித்திட்டம் தீட்டி பொத்தாரியின் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் அளவிற்கு செய்துவிடுகிறான். ப்ரோ கபடி போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் செல்லைய்யா இழக்கிறான். இதனால் மனமுடையும் செல்லைய்யா, தற்கொலை செய்து கொள்கிறான்.

இறந்து போன செல்லைய்யா மீது வீண் பழி சுமத்தி, ராஜ்கிரண் குடும்பத்தை ஊரைவிட்டு பிரித்தும் வைக்கிறார்கள். இதனால் தன் தம்பி குற்றமற்றவன்,அப்பாவி என நிரூபிக்க ஊரை எதிர்த்து ஊரை எதிர்த்து, தன் குடும்பமே கபடி போட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறும் என சவால் விடுகிறார், கபடியே விளையாடத் தெரியாத ஹீரோ அதர்வா .
இறுதியில் அந்தக் குடும்பத்தின் மீதான பழியை அவர் துடைத்தாரா, இல்லையா என்பதுடன், ஒதுங்கியிருந்த தனது தாத்தா குடும்பத்துடன் அவர் மீண்டும் எப்படி ஒன்று சேர்ந்தார்? இறுதியில் வென்றது யார்? வில்லன்களின் உண்மையான முகம் ஊர் மக்களுக்கு தெரிந்ததா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது க்ளைமேக்ஸ்.
திறமையின் தேடல்
கிராமத்து குடும்பக் கதையை அதன் மணம் மாறாமல் திரையில் பரிமாற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். கபடியை களமாக்கியிருக்கிறார். மண்சார்ந்த படைப்புகளில் தேர்ந்த அவரின் முயற்சியாகும்.
அதர்வா தனது முந்தைய படங்களைப் போலவே ஒரு தீவிரமான நடிப்பை வழங்க தன்னால் இயன்றவரை முயற்சி செய்துள்ளார். இருந்தாலும் தலைமை பாத்திரம் அவருக்கு குறைவு.
ராஜ்கிரண், நீளமான தாடியுடன் கிராமத்து கதைகளுக்காகவே அளவெடுத்து செய்த தோற்றத்தில் பக்காவாக பொருந்திப்போகிறார். இறுதிக் காட்சியில் சீறிப்பாயும் போதும் ஒரு சீனியர் நடிகர் என்பதை பதியவைக்கிறார். கதாபாத்திரத்துக்கான அவரின் நடிப்பு திரையில் பிரதிபலிக்கிறது.

துணைக் கதாபாத்திரங்களாக ராஜ் அய்யப்பா, ராதிகா, ஜெயப்பிரகாஷ் சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ், பாலசரவணன் தேர்வு கச்சிதம். நாயகி ஆஷீகா ரங்கநாதன் காதல் மற்றும் பாடல் காட்சிகளுக்காக மட்டும் தலைக்காட்டிச் செல்கிறார்.
துணைக் கதாபாத்திரங்களாக ராஜ் அய்யப்பா, ராதிகா, ஜெயப்பிரகாஷ் சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ், பாலசரவணன் தேர்வு கச்சிதம். நாயகி ஆஷீகா ரங்கநாதன் காதல் மற்றும் பாடல் காட்சிகளுக்காக மட்டும் தலைக்காட்டிச் செல்கிறார். இருந்தாலும் ஆஷிகா முழுக்க முழுக்க கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் பரவாயில்லை. சென்டிமென்ட் காட்சிகளில் பின்னணி இசை நன்று.
படத்தின் சிறப்பு
ராஜ்கிரன், அதர்வா நடிப்பு சிறப்பு.
கபடி விளையாட்டை மையமான கதை, குடும்ப கதை,
ஒளிப்பதிவும் பின்னணி இசை
கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு.
படத்தின் சொதப்பல்கள்
பட செண்டிமெண்ட் அதிகம்
கொஞ்சம் ஆக்ஷன், அடிதடி காண்பித்து இருந்தால் ஆட்டம் சூடு பிடித்திருக்கும்.
காமெடிகள் செட் ஆகவில்லை.
பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை.
முதல் பாதி சலிப்பு

மதிப்பீடு: 2.75/5
சென்டிமன்ட் காட்சிகளை கத்தரித்துவிட்டு, இன்னும் கொஞ்சம் சண்டைக் காட்சிகளையும் இணைத்திருந்தால், பட்டத்து அரசன் உண்மையாகவே பட்டையை கிளப்பியிருக்கும். மொத்தத்தில் பட்டத்து அரசன் மகுடம் சூடவில்லை என்றாலும் குடும்பமாக பார்க்கலாம்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.