செய்திகள் | கலை காட்சி கூடம்

கீழடி அருங்காட்சியகத்தில் நடிகர் சூர்யா குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | Photos of actor Suriya with family members at Keezhadi Museum going viral

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Photos of actor Suriya with family

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் மற்றும் தந்தை சிவக்குமார் ஆகியோருடன் மதுரை அருகில் சிவகங்கை மாவட்டம் அருகில் உள்ள கீழடி அருங்காட்சியகத்துக்கு சென்று பார்வையிட்டார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கீழடி அருங்காட்சியதின் சிறப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார் .

Photos of actor Suriya with family

அதாவது
பெருமிதம்!!! வைகைநாகரீகம் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை ‘கீழடி’ உணர்த்துகிறது. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.. தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே.. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும்..

Photos of actor Suriya with family


அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள்..
குழந்தைகளுடன் அனைவரும் வருக! என குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts