செய்திகள் | கலை காட்சி கூடம்

நடிகை சரிதாவின் மகன்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | Photos of actress Saritha’s sons are going viral

தமிழ் சினிமாவில் 80களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. 1978ம் ஆண்டு ‘தப்பு தாளங்கள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சரிதா.

முதல் படத்திலேயே, தன் மென்மையான அழகாலும், நடிப்பு திறமையாலும் ரசிகர் மனதை கவர்ந்தார்.

‘மலையூர் மம்பட்டியான்’ என்ற திரைப்படத்தில் சரிதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

Photos of actress Saritha’s sons are going viral

அதிக கவர்ச்சி காட்டாமல், குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார் சரிதா.

Photos of actress Saritha’s sons are going viral

கடந்த 1988ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் முகேஷை காதலித்து திருமணம் செய்தார் சரிதா. இத்தம்பதிக்கு ஷர்வன், தேஜஸ் என்கிற இரு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், சரிதாவின் மகன் ஸ்ரவன் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், தன் அம்மா சரிதா மற்றும் சகோதரருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது நடிகை சரிதாவின் மகன்களின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Similar Posts