கீர்த்தி சுரேஷ் தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது | Photos of Keerthy Suresh with her sister are now going viral on social media
கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக 2000-ஆண்டில் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர், 2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

திரையுலகில் அறிமுகமாகி மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், 2015-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பெரிதும் அறியப்படாத இவர், 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.

இதன் பின்னர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஓய்வில்லாமல் நடித்தது வருகிறார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்சின் சகோதரிக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்துக்கள் கூறி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அக்காவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



