மாமன்னன் வடிவேலு வெர்ஷனில் ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. | Photos of many leading actors like Rajini, Kamal, and Ajith in the Mamannan Vadivelu version are going viral.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் தான் முதன்மையானதாக இருக்கும் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

வழக்கமாக காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த வடிவேலுவை, வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேநேரம் முன்னணி ஹீரோக்களின் போஸ்டர்ஸ் வெளியாகும் போது, அதனை வடிவேலு வெர்ஷனில் ரீ-கிரியேட் செய்து மீம்ஸ்கள் வைரலாகும். ஆனால், மாமன்னன் விசயத்தில் இது அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

இந்நிலையில், மாமன்னன் படத்தில் இருந்து வெளியான வடிவேலுவின் போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது. அந்தவகையில் வடிவேலுவின் இந்த போஸ்டர் தற்போது ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன்,சிம்பு மற்றும் விஜய்சேதுபதி வெர்ஷனில் வெளியாகி வைரலாகி வருகிறது.

