செய்திகள் | கலை காட்சி கூடம்

தேவதை போல் புதிய விளம்பரத்தில் நடித்த நயன்தாராவின் வைரலாகும் புகைப்படங்கள் | Photos of Nayanthara going viral in a new ad looks like an angel

மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானநயன்தாரா,
இப்படத்தினை தொடர்ந்து தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து புகழ் பெற்ற ஐயா திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் நடித்து தமிழில் சிறந்த அறிமுக நடிகையென பலரால் கௌரவிற்கப்பட்டார்.

Photos of Nayanthara going viral in a new ad looks like an angel

இப்படத்தினை தொடர்ந்து இவர் 2005-ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையில் பிரபலமாகியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார்.

Photos of Nayanthara going viral in a new ad looks like an angel

நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பின்னர், இவர் திரைத்துறையில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார், ஆனால் இவர் மீண்டும் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்று ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்னும் புனைப் பெயரோடு தென்னிந்திய சினிமாவில் முன்னணி முக்கிய நடிகையாக புகழ் பெற்று நடித்து வருகிறார்.

Photos of Nayanthara going viral in a new ad looks like an angel

அதிக சம்பளங்களில் நடிக்கும் நடிகையாக நயன்தாரா புகழ் பெற்றுள்ளார். இவரது திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவதால் இவர் பெரிய அளவில் தன் வர்த்தகம் மற்றும் மார்க்கெட்-யை உயர்த்தி தன் திரைவாழ்க்கையில் வெற்றி கண்டுள்ளார்.

நயன்தாரா 2022 – ஜூன் 09ல் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் விக்னேஷ் சிவன் (தமிழ் திரைப்பட இயக்குனர்) உடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளளதாக அறிவித்திருந்தனர்.வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோராக மாறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தங்க ஆபரண விளம்பரத்தில் நடித்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்க்களில் வைரலாகிவருகிறது.

Similar Posts