செய்திகள் | திரைப்படங்கள்

சபரிமலையில் நடைபெற்று வரும் யோகிபாபுவின் சன்னிதானம் PO படப்பிடிப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. | Photos of Yogi Babu’s sannithanam PO shooting going on at Sabarimala are going viral.

ராஜீவ் வைத்யா இயக்கத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து வரும் மலையாள திரைப்படம் தான் ‘சன்னிதானம் PO’.

Photos of Yogi Babu’s sannithanam PO shooting going on at Sabarimala are going viral

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தொடர்ந்து கதையின் நாயகனாகவும் வெற்றி பவனி வரும் யோகிபாபு இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ், வேலராமமூர்த்தி, பிரமோத் ஷெட்டி, மேனகா சுரேஷ், வினோத் சாகர், வர்ஷா விஸ்வநாத், மித்ரா குரியன் ஆகியோர் இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

Photos of Yogi Babu’s sannithanam PO shooting going on at Sabarimala are going viral

மேலும் இதில் கன்னட நடிகர் அஸ்வின் ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட குழந்தை நட்சத்திரம் ராக்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக சபரிமலையில் நடைபெற்று வருகிறது .

குறிப்பாக கடந்த சனிக்கிழமை முதல் யோகிபாபு நடிக்கும் காட்சிகள் இங்கே விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது.

Similar Posts