பிச்சைக்காரன்2 படத்தின் திரைவிமர்சனம் | Pichaikkaran2 Movie Review

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் பிச்சைக்காரன். பிச்சைக்காரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், தற்போது அதன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த படத்தை சசிக்கு பதிலாக விஜய் ஆண்டனியே இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ள இப்படத்தில் காவ்யா தப்பார் ஹீரோயினாக நடித்துள்ளார். படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்..
படக்குழு
இயக்கம்:
விஜய் ஆண்டனி
தயாரிப்பு:
விஜய் ஆண்டனி
வெளியீடு:
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
முக்கிய கதாபாத்திரங்கள்:
விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், ராதா ரவி, யோகி பாபு
இசை:
விஜய் ஆண்டனி
படத்தின் கதை
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராகக் கூறப்படும் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி) இவரிடம் இருந்து இந்த சொத்துக்களை அபகரிக்க விஜய் குருமூர்த்தி கம்பெனியின் CEO அரவிந்த் திட்டம் தீட்டி வருகிறார். இந்த சமயத்தில் மூளை மாற்று அறுவை சிகிச்சை பற்றி அரவிந்துக்கு தெரிய வருகிறது. இந்த மூளை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம், வேறொருவரின் மூளையை விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்தி, தான் சொல்வதை மட்டும் கேட்கும் ஒருவராக மாற்ற அரவிந்த் முடிவு செய்கிறார்.

சிறையில் இருந்து வெளியே வரும் பிச்சைக்காரன் சத்யா (விஜய் ஆண்டனி) இருவரும் முற்றிலுமாக ஒருவருக்கு ஒருவர் சம்பந்தமே இல்லாத நிலையில் அவருடைய மூளையை விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்துகிறார்கள். பிச்சைக்காரன் சத்யா தனது சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்து தங்கையுடன் நடு ரோட்டிற்கு வந்து பிச்சையெடுக்கிறார். இப்படியொரு சூழ்நிலையில், தனது தங்கையையும் தொலைத்து விடுகிறார்.

சிறுவயதில் தொலைந்துபோன தனது தங்கையை தேடி திரியும் சத்யாவின் மூளை தற்போது இந்தியாவின் பணக்காரன் விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்தப்படுகிறது. சத்யா அதன்பின் விஜய் குருமூர்த்தியாக மாறுகிறார். காணாமல் போன தனது தங்கையை விஜய் குருமூர்த்தியின் செல்வாக்கை வைத்து கண்டுபிடித்தானா? இல்லையா? ஆன்டி பிகிலியை ஆரம்பிக்க என்ன காரணம்? அதன்பின் என்ன நடந்தது? சத்யாவின் தங்கைக்கு என்னவானது? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தின் சிறப்பு
படத்தின் பின்னணி இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது.
இரண்டாம் பாதியில் வரும் பிகிலி எதிர்ப்பு தத்துவம் குறிப்பிடத் தக்கது, ஏனெனில் இது வறுமை, பசி மற்றும் சுகாதாரப் பற்றாக்குறை போன்ற சில உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறது.
விஜய் ஆண்டனி தனது நடிப்பில் புதிதாக எதுவும் செய்யவில்லை, ஆனால் இந்த படத்தை இயக்கி நடித்து இசையமைத்திருப்பது பெரிய பிளஸ் என்றே சொல்லலாம்.
படத்தின் சொதப்பல்கள்
முதல் காட்சியிலிருந்தே யதார்த்தத்திலிருந்து சற்று விலகிச் செல்கிறது.
மதிப்பீடு: 2.75/5
“விஜய் ஆண்டனி கலக்குகிறார். ஆனால் படத்தில் புதிதாக அம்சங்கள் எதுவும் இல்லை. கதை சொல்லும் விதத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் படத்தை ஒருமுறை பார்க்கலாம்”
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.