செய்திகள்

பைக் ஓட்டியிடம் லிப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன் வைரலாகும் புகைப்படம் | Picture of Amitabh Bachchan asking a bike rider for a lift went viral.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Picture of Amitabh Bachchan asking a bike rider for a lift went viral.

சமீபத்தில் அமிதாப் பச்சன் ஒரு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தனது வீட்டில் இருந்து காரில் சென்றுள்ளார் திடீரென ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், அவரது கார் மேலும் செல்ல முடியவில்லை. இதனால் படப்பிடிப்பு தாமதமாகும் என்பதை உணர்ந்த அவர், பைக் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

The picture of Amitabh Bachchan asking a bike rider for a lift went viral.

இதுதொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், “சவாரி நண்பருக்கு நன்றி. நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் ஒப்புக்கொண்டு என்னை வேகமாக படப்பிடிப்பு இடத்திற்கு அழைத்து வந்து தீர்க்க முடியாத போக்குவரத்து சிக்கலைத் தவிர்த்துவிட்டீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் டி-ஷர்ட் அணிந்துள்ளார்.” நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Similar Posts