தயவுசெஞ்சு என்னை வாழ விடுங்க, ராஜ்கிரணின் வளர்ப்பு மகள்..!(Please let me live, said Rajkiran’s adopted daughter)
பிரபல நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகரை முகப்புத்தகம் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் ராஜ்கிரணின் இரண்டாவது மனைவி கதீஜா, பிரியா 17 சவரன் நகை மற்றும் குடும்பத் தாலியை எடுத்து சென்றுவிட்டதாகவும், ராஜ்கிரண் மீது அவதூறு பரபரப்புவதாகவும் புகார் அளித்தார்.
அப்போது கதீஜா தரப்பில் யாரும் ஆஜராகாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரியா, “கதீஜா ராஜ்கிரண் (பிரியாவின் தாயார்) ஒவ்வொரு நாளும் எனக்கு டார்ச்சர் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.
இதனால கடுமையான மன உளைச்சல்ல இருக்கேன். எங்க போறதுன்னு தெரியாம ஆதரவு கேட்டு எங்க அப்பாகிட்ட போனா, அவர் மேலயும் புகார் கொடுத்துருக்காங்க. அந்த வீட்டுக்கு நான் வேலைக்காரியாக இருக்கணும்னு தான் எதிர்ப்பார்க்குறாங்க. என்னைய என் கணவரோட தயவுசெஞ்சு வாழ விடுங்க. என்னை தொந்தரவு பண்ணாதீங்க.என தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
