செய்திகள்

தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய், துயரில் கவிஞர் கபிலன் ..!(Poet Kapilan in grief)

மகளின் மரணத்தை நினைத்து மீளா துயரில் இருக்கும் கபிலன் தற்போது ஒரு உருக்கமான கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார். படிக்கும் போது கண்ணீரை வர வைக்கும் அந்த கவிதை பலரின் மனதையும் உருக செய்துள்ளது. 

அதில் அவர், எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால் நான் எப்படி தூங்குவேன். எங்கே போனால் என்று தெரியவில்லை அவள் காலனி மட்டும் என் வாசலில், மின்விசிறி காற்று வாங்குவதற்கா உயிரை வாங்குவதற்கா? அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்

அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா எனக்கு தெரியாது அவள் தான் என் கடவுள் குழந்தையாக அவளை பள்ளிக்கு தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது. கண்ணீர் துளிகளுக்கு தெரியுமா கண்களின் வலி, யாரிடம் பேசுவது, எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்.

இந்த கவிதை தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் மகளை இழந்து வாடும் கபிலனுக்கு அவர்கள் ஆறுதலையும் கூறி வருகின்றனர்.

Poet Kapilan

Similar Posts