செய்திகள்

கவிஞர் கபிலனின் மகள் தூரிகை காதல் தோல்வியால் இறந்தாரா..!(Poet Kapilan’s daughter died of love failure)

கவிஞர் கபிலனின் மகள் தூரிகை சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆங்கில நாளிதழை திறம்பட நடத்தி வரும் தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும், கவிதை, கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதி இருக்கிறார்.

மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய தைரியமும், பக்குவமும் கொண்ட இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்ற கேள்விதான் தற்போது திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.

அதிலும் தூரிகையை பற்றி தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் அவருடைய இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளின் ரகசிய காதல் கவிஞரின் காதுக்கு எப்படியோ தெரிய வந்திருக்கிறது. ஆனால் அவர் அந்த காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி தடை போட்டிருக்கிறார். மேலும் மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையையும் பார்த்து முடிவு செய்து இருக்கிறார்.

இப்படியாக நிலைமை கைமீறி போகவே அப்பெண் அவசரப்பட்டு தன்னுடைய இறுதி முடிவை தேடி இருக்கிறார். அனைத்தையும் நிதானமாக செய்யும் அவர் தீவிர மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் காரணமாகத்தான் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது..

Poet Kapilan

Similar Posts