செய்திகள் | திரைப்படங்கள்

பொன்னியின் செல்வன் – 2 மேக்கிங் GLIMPSE.. வீடியோ! | Ponniin Selvan – 2 Making GLIMPSE.. Video!

இயக்குநர் மணிரத்தனத்தின் இயக்கத்தில் கடந்த வருடம் (2022) செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

Ponniin Selvan – 2 Making GLIMPSE.. Video!

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படக்குழு பொன்னியின் செல்வன் – 2 படத்தின் படப்பிடிப்பு மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. படம் குறித்து நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம் ஆகியோர் படம் குறித்து பேசி உள்ளனர். இதுவரை காணாத ஒன்றை நாம் காணப் போகிறோம் என கார்த்தி பொன்னியின் செல்வன் குறித்து பேசியுள்ளார். மேலும் ஆதித்த கரிகாலன் குறித்தும், அந்த கதாபாத்திரத்தின் காதல் குறித்தும் நடிகர் விக்ரம் பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Similar Posts