பொன்னியின் செல்வன் 2 வின் புதிய தகவல் |Ponniin Selvan 2 new updates
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் இறுதியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் மிக முக்கியமான அப்டேட்டை வித்தியாசமான போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

குந்தவை த்ரிஷா கையில் வாளுடனும் வந்தியத்தேவன் கார்த்தி கண்களை கட்டிக் கொண்டு மண்டியிட்டு இருப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கார்த்தியும் த்ரிஷாவும் சந்திக்கும் காட்சியின் பின்னணியில் ‘அக நக’ என மெல்லிதாக ஒரு இசை துணுக்கு ஒலிக்கும். அதன் முழுமையான வெர்ஷன் தான் பொன்னியின் செல்வன் 2வில் முதல் பாடலாக வெளியாவதாக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் பொன்னியின் செல்வன்-02 படத்தின் முதல் பாடல் இம்மாதம் 20ஆம் தேதி மாலை 06 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.