செய்திகள்

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி (Ponni’s Selvan Jayam Ravi)

விஜய் டிவியில் ராஜூ வூட்ல பார்ட்டி” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமான ராஜூ தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இதில் இமான் அண்ணாச்சி, மதுரை முத்து, பிரியங்கா, தீபா, ஷிவா அரவிந்த் என பலரும் உள்ளனர். ராஜூ வீட்டு பார்ட்டிக்கு வரும் பிரபலங்களிடம் கேள்விகள், டாஸ்குகள் என இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே  இதுவரை இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் தவிர்த்து நடிகை அமலா பால், நடிகர் மன்சூர் அலிகான், வெங்கட் பிரபு, வைபவ், நிதின் சத்யா, நடிகை விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அந்த வகையில் இந்த வாரம் தமிழ் சினிமாவின் 50 வருட கனவுப் படமாக உருவாயிக்கும் பொன்னியின் செல்வன் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாவதை முன்னிட்டு அப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.ஜெயம் படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று தமிழ் சினிமா கொண்டாடும் அளவுக்கு இளம்புயலாக சினிமாவை வலம் வந்து கொண்டு இருக்கும் ஜெயம் ரவி ராஜு வீட்டுல பார்ட்டி ( RajuVootlaParty) அதாவது வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார் தற்போது புறமோ வைரலாகி வருகிறது. அத்துடன் சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது அதில் சில உங்களுக்காக

Ponni’s Selvan Jayam Ravijayam Ravi
Ponni’s Selvan Jayam Ravijayam Ravi

Similar Posts