செய்திகள்

டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்(Ponni’s Selvan sets a record in ticket bookings)

மணிரத்னம் இயக்க தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், ஜெயராம் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்.

பட புரொமோஷன் கூட தமிழகத்தில் தொடங்கி கேரளா. ஹைதராபாத், மும்பை, டெல்லி என நடந்தது.

அதிலும் இப்பட ஆடியோ வெளியீட்டு விழா ரஜினி-கமல் இருக்க படு பிரம்மாண்டமாக நடந்தது, அண்மையில் நிகழ்ச்சி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

Ponni’s Selvan

நாளை மறுநாள் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ், இப்படத்திற்காக எவ்வளவு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் இப்போதே தமிழகத்தில் 2 வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் அனைத்தும் முடிந்துவிட்டதாம்.

முன்பதிவிலேயே சாதனை செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 750 திரையரங்குகளில் வெளியாகிறதாம்.

Similar Posts