பொன்னியின் செல்வன் 2 திரைவிமர்சனம் (Ponniyin Selvan 2 Movie Review)

கல்கியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என இந்தியஅளவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடங்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்பின் பாதியை கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் பூர்த்தி செய்தது. மேலும், ரசிகர்களின் வரவேற்போடு 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதையடுத்து இன்று வெளியான பொன்னியின் செல்வன் 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பாக்கலாம்.
இயக்கம்:
மணிரத்னம்
தயாரிப்பு:
மணிரத்னம்
சுபாஸ்கரன் அல்லிராஜா
வெளியீடு:
லைகா புரொடக்ஷன்ஸ், பென் இந்தியா லிமிடெட், ரெட் ஜெயண்ட் மூவிஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
விக்ரம்,ஜெயம் ரவி த்ரிஷா,பிரபு,கார்த்தி, பிரகாஷ் ராஜ்,ஆர்.சரத்குமார்,ஐஸ்வர்யா ராய்,ஐஸ்வர்யா லட்சுமி,ஜெயராம்,விக்ரம்,
சோபித துலிபால,பிரபு ஆர்.பார்த்திபன் ரஹ்மான்
இசை:
ஏ.ஆர்.ரஹ்மான்
படத்தின் கதை
முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் வந்தியத்தேவனாகிய கார்த்தியும், அருள்மொழிவர்மனாகிய ஜெயம் ரவியும் கடலுக்குள் மூழ்குவதாக முடிந்தது. அப்போது அவர்களை காப்பாற்ற ஊமை ரணியான ஐஸ்வர்யா ராயும் கடலுக்குள் குதிக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக தான் தற்போது வெளியான இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
கடலில் விழுந்து அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் மரித்துப் போனதாக தஞ்சைக்கு தகவல் கிடைத்த நிலையில், சுந்தரச் சோழர், குந்தவை என அனைவரும் மனம் உடைந்து போகின்றனர். ஆதித்த கரிகாலனுக்கு அந்த செய்தி தெரிந்ததும் தன் தம்பியின் மரணத்திற்கு நந்தினி தான் காரணம் என அவளை கொல்ல படையோடு கிளம்பி தஞ்சை நோக்கி வருகிறான். கடலில் விழுந்த இருவரையுமே மந்தாகினி எனும் ஊமை ராணி (ஐஸ்வர்யா ராய்) காப்பாற்றுகிறாள்.

அருள்மொழி வர்மன் உயிர்பிழைத்த விஷயம் பாண்டிய ஆபத்துதவிகளுக்கும், நந்தினிக்கும் தெரியவருகிறது. மறுபக்கம் சோழ நாடு என்னுடையது, சோழ பட்டத்திற்கு உரியவன் நான் தான் என கூறி சிற்றரசர்களுடன் சேர்ந்துகொண்டு பிரச்சனை செய்து வருகிறார் மதுராந்தகன்.

சுந்தர சோழர், ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன் மூவரையும் தனித்தனியாக கொலை செய்ய முடியாது என்பதினால், ஒரே நாளில் சோழ குலத்தின் ஆணிவேறு ஆன இவ் மூவரையும் கொல்ல ஆபத்துதவிகளுடன் இணைந்து புதிதாக திட்டம் ஒன்றை தீட்டுகிறார் நந்தினி. இதில் ஆதித்த கரிகாலனை நானே கொலை செய்கிறேன் என கூறி, அதற்காக ஆதித்த கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு வரும்படி செய்தி அனுப்புகிறார்.

தனது தம்பி அருள்மொழி வர்மன், தங்கை குந்தவை, நண்பன் வந்தியத்தேவன் என மூவரும் தடுத்தும், நந்தினி அழைப்பின் படி கடம்பூருக்கு செல்கிறார் ஆதித்த கரிகாலன்.

மதுராந்தகன் மணிமகுடம் தனக்கு வர வேண்டும் என்கிற முனைப்பில் சோழ நாடு என்னுடையது, சோழ பட்டத்திற்கு உரியவன் நான் தான் என கூறி சிற்றரசர்களுடன் சேர்ந்து சூழ்ச்சிகளை செய்ய ஆரம்பிக்க, மறுமுனையில் அமரபுஜங்காவிற்காக அரியணையை கைப்பற்ற முன்னாள் காதலன் ஆதித்த கரிகாலனை கொல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாள் நந்தினி.வந்தியத்தேவன் குந்தவையின் காதல் என்ன ஆனது? அருள் மொழிவர்மனை திருமணம் செய்து கொண்டாரா வானதி? ஆதித்த கரிகாலனை கொன்றாரா நந்தினி? கடைசியில் மணிமகுடம் யாருக்கு சென்றது? என்பதை சில எதிர்பாராத திருப்பங்களுடன் மணிரத்னம் கொடுத்திருக்கிறார்.
படத்தின் சிறப்பு
ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிப்பு பட்டையை கிளப்புகிறது.
ஐஸ்வர்யா ராய் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் மனதை கொள்ளையடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையே வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. நந்தினியாகவும், ஊமைராணியாகவும் முழு படத்தையும் தன்னுடைய நடிப்பில் தாங்கி நிற்கிறார். அதற்காக ஐஸ்வர்யா ராய்க்கு தனி பாராட்டுக்கள்.
தம்பி ஜெயம் ரவி, தங்கை த்ரிஷா ஆகியோரை சந்திக்கும் உணர்ச்சிகரமான காட்சியிலும் விக்ரம் செம்மையாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி தனது கொடுத்த கதாபாத்திரத்தை தனது நடிப்பின் மூலம் நியாயப்படுத்தி இருக்கிறார்.
வல்லவரையன் வந்தியத்தேவனாக வரும் கார்த்தியின் நடிப்பின் படத்திற்கு பலம்.
குந்தவை திரிஷா கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்துள்ளார்.
காட்சிகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு தனி பாராட்டு. எடிட்டிங் சொல்லும் கதை அழகு.
ஏ.ஆர். ரஹ்மான் தனது இசையால் மிரட்டிவிட்டார்.
பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயராம், சோபிதா, பிரபு, சரசத்குமார், பார்த்திபன், ரஹ்மான், லால், ஜெயசித்ரா, நிழல்கள் ரவி என அனைவரும் அவரவர் கதாப்பாத்திரத்திற்கு தேவையானதை செய்திருக்கிறார்கள்.
படத்தின் சொதப்பல்கள்
துவக்கத்தில் இருந்து மெதுவாக செல்லும் திரைக்கதையை இன்னும் கூட விறுவிறுப்பாக்கி இருக்கலாம்.
மதிப்பீடு: 3.75/5
இவ்வளவு விரைவாக குறைவான நாட்களில் இந்த படத்தை ஸ்மார்ட்டாக கையாண்டு மணிரத்னம் கொடுத்திருப்பதே பாராட்டுக்குரியது.
இயக்குனர் மணிரத்னம் தனக்கு ஏற்றவாறு நாவலில் இருந்து சில இடங்களை மாற்றி அமைத்திருப்பது பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு பெரிய குறையாக தெரியலாம்.
மொத்தத்தில் பொன்னியின் செல்வன் – மக்களின் மனதை வென்றது. இந்த படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.