செய்திகள்

குந்தவை கதாபாத்திரம் வடிவமைப்பு குறித்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு | Ponniyin Selvan film team has released a video showing the scenes of Kundavai’s character design

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் வரலாற்றுப் படைப்பு மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வசூலிலும் மிரட்டியது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு முன்னதாகவே வெளியான நிலையில், வரும் ஏப்ரல் 28ம் தேதி படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷனை படக்குழுவினர் துவக்கியுள்ளனர்.

Ponniyin Selvan film team has released a video showing the scenes of Kundavai’s character design

இந்தப் படத்தின் முதல் பாகத்தில் த்ரிஷாவின் காஸ்ட்யூம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. ஒரு நாட்டின் இளவரசிக்கான இந்த காஸ்ட்யூம் மட்டுமில்லாமல், அவரது மிடுக்கும் குந்தவை கேரக்டருக்கு பலம் சேர்த்தது. அவரது ஒவ்வொரு உடையும், நகைகளும் பிரத்யேகமான கவனம் செலுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது. அவரது சிகையலங்காரமும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. கல்கியின் குந்தவை கேரக்டரை த்ரிஷா கண்முன்னால் கொண்டு வந்திருந்தார்.

Ponniyin Selvan film team has released a video showing the scenes of Kundavai’s character design

இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் த்ரிஷா கேரக்டருக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் ப்ரமோஷன்களை லைகா துவங்கியுள்ளது. இன்றைய தினம் த்ரிஷா குந்தவையாக மாறிய தருணத்தையும் அதற்கு காரணமானவர்கள் குறித்தும் லைகா வீடியோ வெளியிட்டுள்ளது. த்ரிஷாவின் காஸ்ட்யூம் டிசைனர் எகா லகானி, தலையலங்காரம் மற்றும் மேக்கப் விக்ரம் கெய்க்வாட், த்ரிஷாவின் நகைகள் வடிவமைப்பு கிருஷ்ணதாஸ் அண்ட் கோ என்று அந்த வீடியோவில் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் த்ரிஷாவின் அடுத்தடுத்த கெட்டப்புகளும் அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.

மேலும் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் டூரை படக்குழுவினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். படத்தின் வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல, இரண்டாவது பாகத்திற்கும் சிறப்பான பிரமோஷனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Similar Posts