பட்டையை கிளப்பும் பவுடர் திரைவிமர்சனம்..!(powder movie review)

ஆக்ஷன் மற்றும் த்ரில்லருடன் கலந்த நகைச்சுவை திரைப்படம் தான் பவுடர். பல பேரின் வாழ்க்கை சம்பவங்களை ஒரு இரவில் இணைத்திருக்கும் படமாகும். இது விஜய் ஸ்ரீ ஜி எழுதி இயக்கியுள்ளார். ஜி மீடியா பிலிம் பேனரின் கீழ் ஜெய ஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.
படக்குழு

இயக்கம்:
விஜய் ஸ்ரீ ஜி
தயாரிப்பு:
ஜெய ஸ்ரீ விஜய்
வெளியீடு:
ஜி மீடியா மூவி
முக்கிய கதாபாத்திரங்கள்:
வித்யா பிரதீப், நிகில் முருகன், சாந்தினி , விஜய் ஸ்ரீ, தேவா, மொட்ட ராஜேந்திரன், மனோபால், வையாபுரி, மனோஜ்குமார், ஆதவன், அகல்யா, ஆராத்யா
இசை:
லியாண்டர் லீ மார்டி
படத்தின் கதை
பவுடர் பூசிக்கொண்டிருக்கும் மனிதர்களை வெளிப்படுத்துவதே கதையின் பிரதானமாகும். நிறைய குட்டிக் குட்டி கதைகளை இணைத்து இயக்கியுள்ளனர். சினிமாதுறையில் வேலை செய்யும் விஜய் ஸ்ரீ ஜி (பரட்டை )தன் மகனின் ஒன்லைன் வகுப்பிற்காக கேட்கும் சொல்போனிற்காக ஒரு கொலை செய்கிறார். இது ஒரு தனிக்ககதை.(சாமி) வையாபுரி தன் மகள் அணித்ராவை திருமணம் செய்வதாகா கூறி ஏமாற்றியவனிடம் நியாயம் கேட்கிறார்.

இந்நிலையில் தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத ஒரு அரசியல் வாதியை சில இளைஞர்கள் கொன்று, அவரது உடலை தேநீர் கேன்களில் எடுத்துச் செல்கின்றனர். மறுபுறம் கமிஷ்னர் வீட்டில் ஒருவர் காணாமல்போகிறார் அது பற்றி விசாரணை செய்ய நிகில் முருகனை இரவில் அழைக்கிறார் கமிஷ்னர் ரயில்ரவி இது அடுத்த கதையாகும்.
ஒரு மருத்துவர் (வித்யா பிரதீப்) தனது திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு காதலிக்கும் போது நெருக்கமாக இருந்த புகைப்படங்களை காட்டி மிரட்டும் காதலனை சந்திக்க செல்கிறார். இதற்கு நடுவில் மனித கறி வேட்டையும் சென்னையில் நடக்கிறது. இரவில் திருட்டுக்கும்பலும் நடமாடுகிறது. இவை அனைத்தையும் ஒன்றாக இனைத்து எடுக்கப்பட்டது தான் பவுடர்.

இறுதியில் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் திருப்பங்கள் என்ன.? என்ன முடிவு என்பதே மீதிக் கதையாகும்.
திறமையின் தேடல்
நிகில் முருகன் ராகவன் பாத்திரத்தில் நடிகராக தன்னால் முடிந்த அளவு அவரது சிறப்பு திறமையை காட்டியுள்ளார். பரட்டை எனும் கதாபாத்திரத்தில் விஜய் ஸ்ரீ பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கதாநாயகியாக அணித்ரா அழகான நடிகை குடும்பம் காதல் என தனது தவிப்பை நடிப்பில் காட்டியுள்ளார்.
தனது முன்னாள் காதலனிடம் சிக்கிய பறவையாக இருக்கிறார் வித்யா பாலன் தனது நடிப்பில் ரொம்ப அற்புதமாக வெளிக்காட்டியுள்ளார். அவரது காதலன் ரணவு நடிப்பு பரவாயில்லை. இலையா வரும் காட்சிகள் இளைஞர்களுக்கு இன்பமயம். மியாவ் மியாவ் சவுண்ட் பூரிப்பாக இருக்கிறது. சாந்தினி செம ஹாட்.
வையாபுரியுடன் வரும் விக்கி பயந்த சுபாவத்தால் கவருகிறார்.ஆதவன் மற்றூம் சில்மிஷம் சிவா காமெடி உச்சகட்டம். மொட்டை ராஜேந்திரன் மற்றும் வையாபுரியின் நடிப்பு வேற லெவல்.

இசை பிண்ணனி இசை பாராட்டக்கூடியது. ஒளிப்பதிவு (ராஜ பாண்டி, பிரகார்த்)மற்றும் எடிட்டிங்( குணா) நன்றாக இருக்கிறது.
இயக்குனர் வசனங்கள் மூலம் அழுத்தமாக பத்தித்துள்ளார் இயக்குனர். பெண்களை ஏமாற்றியவர்களுக்கு நல்ல பதிவு.
படத்தின் சிறப்பு
வித்தியாசமான கதைக்களம்,
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்,
பிண்ணனி இசை,
காமெடிகள்
படத்தின் சொதப்பல்கள்
மனித கறி காட்சிகள் தெளிவின்மை.
இசை ஒட்டவில்லை
கிளைமாக்ஸில் சற்று தெளிவின்மை

மதிப்பீடு: 3.05/5
மொத்தத்தில் பவுடர் ஒரு பட்டை தீட்டிய வைரம். ஒரு திரில்லர் நகைச்சுவை படமாக பார்க்கலாம். பெண்களை ஏமாற்றியவர்களின் கதி மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு என திரில்லராக தந்துள்ளார் இயக்குனர். பாராட்டுக்கள் புதுவிதமான கதைக்கு.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.