நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய பிரபு தேவா | Prabhu Deva danced to a Naatu Naatu Song
இயக்குனர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான படம் தான் ஆர்.ஆர்.ஆர். இப்படம் பல வசூல் சாதனைகளை படைத்தது.

சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் வென்றது.

இப்பாடலை இசையமைத்த கீரவாணிக்கு பல பிரபலங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரபுதேவா மற்றும் அவரின் நடன குழுவினர்கள் சேர்ந்து நாட்டு நாட்டு நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.