யுவன் ஒரு பிராடு, தண்டம், என்ற பழைய டுவிட்டால் சர்ச்சையில் பிரதீப் ரங்கநாதன்..!(Pradeep Ranganathan on the old tweet controversy that Yuvan is a Pradu, Thandam)
பிரதீப் இயக்கத்திலும் ஹீரோவாகவும் நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் என்னுடைய படத்துக்கு இசையமைப்பார் என நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை என பிரதீப் பெருமையாக கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரதீப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யுவன் ஒரு பிராடு, தண்டம் என கூறி பதிவு செய்துள்ள பதிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து சர்ச்சையில் சிக்க வைத்துள்ளனர்.
அதேபோல் மங்காத்தா படத்தின் பிஜிஎம் வீடியோவை வெளியிட்டு யுவன் காபி கேட் என விமர்சனம் செய்துள்ளார். இந்த பதிவுகளுக்கு பிரதீப் என்ன விளக்கம் தரப் போகிறார்

